பி.எஸ்.என்.எல் தமிழகத்தில் வேனிட்டி மொபைல் எண்களை இ-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களாக ஃபேன்சி எண்களைப் பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். ஃபேன்சி எண்களின் ஆன்லைன் ஏலத்திற்கு கடைசி தேதி 14.09.2022 ஆகும்.
மொபைல் எண் என்பது ஒருவரது எளிதான அடையாளம், இதன் மூலம் நாம் மற்றவர்களையும், மற்றவர்கள் நம்மையும் தொடர்பு கொள்ளலாம். ஒரு தொழிலதிபருக்கு மொபைல் எண் என்பது அவரது வாடிக்கையாளர்களுக்கு எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய ஃபேன்ஸி எண்ணாக இருக்க வேண்டும். சில நபர்களுக்கு ஃபேன்ஸி எண் வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.குறிப்பாக, சிலருக்கு நம் பிறந்த தேதி, வருடம் அல்லது வாகன எண் அல்லது ஏதோ பிடித்த எண் தொலைபேசி எண்ணின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ உள்ள எண்களை வாங்கிப் பயன்படுத்துவதில் தனி ஆர்வம் இருக்கும்.
சிலர் அலுவலக பயன்பாட்டிற்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்காக தொடர்ச்சியான எண்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். அனைவரின் ஃபேன்சி எண் தேவையை பூர்த்தி செய்வதற்காக, பிஎஸ்என்எல் பல்வேறு வகையான வேனிட்டி எண்களை வழங்குகிறது.