fbpx

BUDGET 2025 | 60 ஆண்டுகளாக இருக்கும் வருமான வரிச்சட்டம் மாற்றம்.. 36 மருந்துகளுக்கு வரி விலக்கு..!! – பட்ஜெட் அறிவிப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும். ஆண்டின் முதல் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த தொடர் தொடங்குகிறது. அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது.

இந்நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட் இதுவாகும். வேறு எந்தவொரு நிதியமைச்சரும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை. மத்தியில் பாஜக 3-வது முறையாக ஆட்சியமைத்தப் பின் தாக்கல் செய்த இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.

* அனைத்து உயர்நிலை.. மேல் நிலை பள்ளிகளுக்கு இலவச இணைய வசதி

* பொம்மை தயாரிப்புகளின் மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை

* புதிய தொழில் முனைவோருக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

* கூடுதலாக 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்படும்.

* மாவட்ட தலைமை மருத்துவமனைகளின் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க மையம்

* அனைத்து வீடுகளுக்கும் குடி நீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டம் 2028க்குள் முழுமையடையும்.

* புதிதாக தொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு

* IIT, IISC மாணவர்கள் 10 ஆயிரம் பேருக்கு பிரதமர் நிதி ஆராய்சி திட்டத்தில் கீழ் நிதி உதவி

* 60 ஆண்டுகளாக இருக்கும் வருமான வரிச்சட்டம் மாற்றம்.. புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல்

* சுய உதவி குழுக்களுக்கு கிராமிய கடன் அட்டை வழங்கப்படும்.

* காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு 100 சதவீதம் அதிகரிப்பு

* புற்று நோய் போன்ற நாள்பட்ட நோய்களுக்குக்கான மருந்துகளுக்கு வரி விலக்கு

Read more : BUDGET 2025 | கூடுதலாக 10 ஆயிரம் மருத்துவ இடங்கள்.. அனைத்து பள்ளிகளுக்கும் இலவச இணைய வசதி..!! – நிர்மலா சீதாராமன்

English Summary

BUDGET 2025 | 60 years old income tax law change..!! – Budget announcement

Next Post

BIG BREAKING | மின்சார வாகனங்கள், செல்போன்களின் விலை குறைகிறது..!! நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு..!!

Sat Feb 1 , 2025
Lithium batteries are completely exempt from customs duty.

You May Like