fbpx

பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்வு…! இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு…!

இன்று முதல் எருமைப்பால் லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மும்பை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ; நகரில் இன்று முதல் எருமைப்பால் லிட்டருக்கு 5 ரூபாய் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை ஏற்றம் குறித்து பேசிய சங்கத்தின் தலைவர்; எருமைப்பாலின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள 3,000 சில்லறை விற்பனையாளர்கள், லிட்டருக்கு ரூ.80லிருந்து ரூ.85 ஆக உயர்த்தப்பட்டு, ஆகஸ்ட் 31 வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2022 எருமைப் பால் விலை லிட்டருக்கு 75 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்த்தப்பட்டதன் மூலம், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்பொழுது பால் விலை இரண்டாவது முறையாக மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Vignesh

Next Post

ரயில் பயணிகள் கவனத்திற்கு..!! முக்கிய வழித்தடங்களில் இன்று முதல் ரயில்கள் ரத்து..!! விவரம் உள்ளே..!!

Wed Mar 1 , 2023
சென்னையில் இருந்து மதுரை வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் சில நாட்களுக்கு இந்த ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை – திருப்பரங்குன்றம் -திருமங்கலம் ரயில் வழித்தடத்தில் இரட்டை வழி பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், இன்று (மார்ச் 1) முதல் பல்வேறு தேதிகளில் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் […]

You May Like