fbpx

“பார்வையாளரை முட்டி தூக்கிய காளை..” துடிதுடித்து பலியான இளைஞர்.! மதுரை மஞ்சு விரட்டில் நடந்த சோகம்.!

தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகளை குளிப்பாட்டி அவற்றிற்கு விதவிதமான அலங்காரங்கள் செய்து கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர்.

மேலும் மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் எலியார்பட்டி கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது பார்வையாளர் ஒருவரை மாடு முட்டியதால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எலியார்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டின் போது பார்வையாளர்கள் பகுதிக்குள் புகுந்த காளை ராஜேஷ் என்ற இளைஞரை மூட்டியது. இதில் படுகாயம் அடைந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இளைஞரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 2024 ஆம் வருட மஞ்சுவிரட்டு போட்டியில் நடைபெற்ற முதல் மரணம் இதுவாகும் .

Next Post

"சனாதன தர்மத்தின் மகா முனிவர் திருவள்ளுவர்" - ஆளுநர் ஆர்.என் ரவியின் கருத்தால் வெடித்த சர்ச்சை.!

Tue Jan 16 , 2024
தமிழகத்தின் சிறப்பு மிக்க அடையாளங்களில் ஒருவராக விளங்கும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த சம்பவம் மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்ட இந்த தினத்தில் ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் காவிநிற உடை அணிந்து கழுத்து மற்றும் நெற்றியில் பட்டையுடன் திருவள்ளுவர் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ராஜ் பவனின் எக்ஸ் வலைதளத்தில் தமிழக […]

You May Like