fbpx

பள்ளியில் கொடுமை,மிட்டாய் விற்ற எலான் மஸ்க்..

மார்டன் உலகில் டெக்னாலஜியை புரட்டிப் போட்டவர்களில் முக்கியமானவர் ஸ்டீவ் ஜாப்ஸ், கம்ப்யூட்டர் பெரிய நிறுவனங்களுக்கான என்ற கூறப்பட்ட காலத்தில் மக்கள் தங்களுடைய வீடுகளில் எளிய முறையில் GUI மூலம் பயன்படுத்த முடியும் என அறிவித்து மக்கின்டாஷ் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தார், அதன் பின்பு ஸ்மார்ட்போன், ஐபாட், பிக்சார் திரைப்படம் என ஒவ்வொரு தயாரிப்புகளும் அதன் வரலாற்றை மறக்க செய்தது.   கிட்டத்தட்ட ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு இணையாக இன்று பேசப்படுபவர் எலான் மஸ்க் காரணம், டிஜிட்டல் நிதி பரிமாற்றத்தை X.com வாயிலாகவும், பெட்ரோல் – டீசல் கார்கள் மட்டுமே இருந்த வேளையில் எலக்ட்ரிக் வாகனங்களை டெஸ்லா மூலம் அறிமுகம் செய்ததில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க், போரிங் கம்பெனி என பலவற்றில் வரலாற்றை மாற்றியுள்ளார்.

இப்படிப்பட்ட எலான் மஸ்க்-க்கிற்கு 52 வயதாகியுள்ளது, இதை அழகாக டிவிட்டரில் 42 + 10 என டிவீட் செய்து தெரிவித்துள்ளார். இந்த ஒரு டிவீட்-ஐ மட்டுமே சுமார் 71.6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 95,900 பேர் ரிப்ளை செய்துள்ளனர். உலக நாடுகளை வியக்க வைத்த Xi Jinping எலான் மஸ்க்-ன் இளமை பருவம் என்ற உடன் அவர் ஆப்பிரிக்காவில் பிறந்தார், அதன் பின்பு தனது தாய் மற்றும் சகோதரர் உடன் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். படிப்புக்காக அமெரிக்கா வந்து பிஸ்னஸ் துவங்கி இன்று அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார் என்பது எல்லோருக்கும் தெரியும்.தென்னாப்பிர்க்காவின் Pretoria-வில் எலான் மஸ்க் வளர்ந்த போது, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சாக்லேட் ஈஸ்டர் முட்டையை வீடு வீடுடாக சென்று விற்பாராம். ஆனால் எலான் மஸ்க் ஷார்ப்.. இவர் விற்பது என்னவோ பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் தெருவில். 50 சென்ட்-க்கு தயாரித்த சாக்லேட் முட்டையை 10 டாலருக்கு விற்பாராம். ஏன் அதிக விலை என கேட்டால் நிங்கள் இளம் capitalist-ஐ உருவாக்குகிறீர்கள் என்று கூறுவாராம்.

தென்னாப்பிர்க்காவில் எலான் மஸ்க் படித்துக்கொண்டு இருந்த போது இவர் தான் மிகவும் அறிவாளியான குழந்தை. இதனால் பலரும் இவரை கேளி, கிண்டல் செய்து பலமுறை அடித்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர். ஒருமுறை அவரை பலர் சேர்ந்து அடித்ததன் மூலம் மரணம் வரையில் சென்று வந்ததாகவும் கூறியுள்ளார். எலான் மஸ்க் இளமை பருவத்திலேயே அதிகம் படிக்கும் பழக்கம் கொண்டவர் என்பதால் எப்போதம் தன்னுடைய அறிவியல் கண்டுப்பிடிப்புகள் குறித்து பகல் நேரத்திலேயே கனவு காண்பாராம். இதனால் யார் கூப்பிட்டாலும் அவருக்கு கேட்காது என்பதால் எலான் மஸ்க் பெற்றோர் அவருக்கு காது கேட்கவில்லை என பல வருடம் கவலை அடைந்துள்ளனர்.

எலான் மஸ்க் இளமை பருவத்திலேயே வீட்டில் பெற்றோர்கள் இல்லாத போது தானே சொந்தமாக ராக்கெட் மற்றும் வெடி பொருட்களை செய்துள்ளார். எலான் மஸ்க் 12 வயதிலேயே கம்ப்யூட்டர் கோடிங் கற்றுக்கொண்டு Blaster என்ற ஸ்பேஸ் பேட்டில் கேம்-ஐ உருவாக்கியுள்ளார். இது மட்டும் அல்லாமல் இந்த கேம்-ஐ 500 டாலருக்கு விற்பனை செய்து அப்போத பணம் சம்பாதித்துள்ளார். வீடியோ கேம் மீதான அதிகப்படியான ஆர்வத்தால் 16 வயதிலேயே சொந்தமாக video arcade-ஐ தனது பள்ளிக்கு அருகில் திறந்துள்ளார். ஆனால் ரியல் உரிமம், வர்த்தக உரிமம் ஆகியவை இல்லாத காரணத்தால் சில நாட்களிலேயே மூடப்பட்டது.

Maha

Next Post

500 ரூபாய் கட்டுகளுடன் சிக்கலில் சிக்கிய காவல் அதிகாரி..!

Fri Jun 30 , 2023
உத்திரபிரதேச மாநிலம் உன்னாவோவில் காவல் அதிகாரியாக பணியாற்றுபவர் ரமேஷ் சந்திர சஹானி. இவர் காவல் நிலைய பொறுப்பாளராக பணியாற்று வந்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியே இவருக்கு எதிராக மாறியுள்ளது. அந்த செல்ஃபியில், தனது வீட்டில் கட்டிலில் தனது மனைவி மற்றும் குழந்தைகள் சூழ உட்கார்ந்து கொண்டு, நடுவில் 500 ரூபாய் தாள்களை பரப்பிவைத்துள்ளார் அவர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவர் மேல் நடவடிக்கை […]

You May Like