fbpx

சென்னையில் இன்று பேருந்து சேவைகள் வழக்கம் போல் இயங்கும்..!

தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று(நவ.30ஆம் தேதி) பிற்பகல் 2.30 மணியளவில் ஃபெஞ்சல் புயலாக உருவெடுத்தது. இந்த புயல் ஆனது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று (நவ.30) பிற்பகலில் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும், தமிழக கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது

புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக கடற்கரை. பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொள்கிறது.

மேலும் சென்னையில் இன்று மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் மட்டும் புயல் காரணமாக பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Read More: சனிப்பெயர்ச்சி 2025 : இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகும் சனி பகவான்..!!

English Summary

Bus services will run as usual in Chennai today..!

Kathir

Next Post

ஜாபர் சாதிக்கின் ஜாமீன் மனு... ED-க்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

Sat Nov 30 , 2024
Jaffer Sadiq's bail plea... CBI special court orders ED to take action

You May Like