மத்திய அரசு ஆதரவிலான PM Shri பள்ளிகள் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய திட்டம் தற்போது மத்திய மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் தெரிவு செய்யப்பட்ட பள்ளிகள் வலுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 14,500-க்கும் அதிகமான பள்ளிகளில் PM Shri பள்ளிகளாக மேம்படுத்தும்.
இந்த PM Shri பள்ளிகள், தேசிய கல்விக்கொள்கை 2020-ன் அனைத்து அம்சங்களையும் கொண்டதாகவும் மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாகவும் விளங்கும். இந்தப் பள்ளிகள் தரமான பயிற்றுவித்தல் மூலம் மாணவர்களை மேம்படுத்துவதோடு, 21-ம் நூற்றாண்டுக்கான திறன்களுடன் ஒவ்வொரு மாணவரையும் முழுமையான அனைத்து திறன் கொண்டவராக உருவாக்க பாடுபடும்.
மத்திய அரசின் ஆதரவிலான இந்தப் பள்ளிகளுக்கு மொத்தச் செலவு ரூ.27,360 கோடியாக இருக்கும். இதில் 2022-23 முதல் 2026-27 வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கு மத்திய அரசின் பங்கு ரூ.18,128 கோடியாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.