fbpx

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கும் திட்டம்…! மத்திய அரசு ஒப்புதல்…!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2024-25-ம் ஆண்டு முதல் 2025-26-ம் ஆண்டு வரை ரூ.1261 கோடி மதிப்பீட்டில் ட்ரோன்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது 2023-24-ம் ஆண்டு முதல் 2025-2026-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகாரமளிப்பதையும், வேளாண் துறையில் ட்ரோன் சேவைகள் மூலம் புதிய தொழில்நுட்பங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, உரத் துறை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், முன்னணி உர நிறுவனங்கள் ஆகியவற்றின் வளங்கள் மற்றும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் முழுமையான தலையீடுகளுக்கு இத்திட்டம் ஒப்புதல் அளிக்கிறது. ட்ரோன்களின் பயன்பாடு பொருளாதார ரீதியாக சாத்தியமான பொருத்தமான குழுமங்கள் அடையாளம் காணப்பட்டு, அடையாளம் காணப்பட்ட தொகுப்புகளில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள் ட்ரோன்களை வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்படும்.

Vignesh

Next Post

ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Thu Nov 30 , 2023
ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதற்கட்ட தேர்வு, பிரதான தேர்வு என இரண்டு பிரிவுகளாக நடைபெறும். இதில் முதற்கட்ட தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை மூலம் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி […]

You May Like