புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள வினோபா நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கன்று ஒன்று சுத்தி கொண்டே மா…மா என அழைத்து அழுது கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் அந்த வழியே வந்த மிருக தடை அமைப்பு தலைவர் அந்த பகுதியில் உள்ள மக்களிடம் விசாரித்துள்ளார். அவர்கள் கூறியதாவது இரு தினங்களுக்கு முன்னர் பசு ஒன்று கறிக்காக இந்த இடத்தில் வெட்டப்பட்டது.
அதனால் இந்த இடத்தை பார்த்த பசுவின் கன்று அடிக்கடி வந்து தாயினை தேடி அழுவதாக கூறினார்கள். இந்த பதிவினை வீடியோ எடுத்த தலைவர் சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இதனிடையில் இந்த வீடியோவானது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
நோய் வாய்ப்பட்ட ஆடு – மாடுகளை வெட்டக்கூடாது என்றும் , இளம் கன்றுகளை வெட்டக்கூடாது என்றும் சட்டம் இருக்கிறது. ஆனால் இந்த பகுதியில் அந்த சட்டத்தை மீறுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து அரசுக்கு பலமுறை ஆதாரங்களுடன் புகார் அளித்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.