fbpx

மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்குமாம்!… இந்த பழக்கங்களை மாற்றுங்கள்!… ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!…

அன்றாட வாழ்வில் சில செயல்பாடுகள் நமது மூளையின் ஆரோக்கியத்தை பாதிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கையும் அறிவுறுத்தியுள்ளனர்.

தினந்தோறும் நடவடிக்கைகள் பழக்க வழக்கங்கள் என மனிதர்களின் ஒவ்வொருரிடையே பல மாறுபாடுகள் இருக்கும். அந்தவகையில் சிலர் அவரவர் பழக்க வழக்கங்களை ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வர். சிலர் அதனை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் அப்படியே விட்டுவிவர். இந்தநிலையில், அன்றாட செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகின்றனர் என்று பார்க்கலாம். அதன்படி, காலை உணவு என்பது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்திற்கு அவசியமான ஒன்று. அதுமட்டும் அல்ல, அன்றைய தினத்தை புத்துணர்சியுடன் துவங்க காலை உணவு மிகவும் முக்கியம். எனவே, காலை உணவை தவிர்ப்பது மூளை ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அதுமட்டும் அல்ல, உடல் எடையை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.அளவுக்கு குறைவாக ஓய்வெடுப்பது மற்றும் தூக்கத்தை தள்ளிப்போடுவது போன்ற விஷயங்களால் உங்கள் மூளையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

கைப்பேசி, கணினி என தனியே அமர்ந்து நேரத்தை செலவிடுவதை காட்டிலும், மனிதர்களுடன் அதிக நேரம் செலவிடுவதே மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, ஒரு 1 மணி நேரமாவது இயந்திரங்களோடு அல்லாமல் மனிதர்களுடன் பழகுங்கள்.சிப்ஸ், பிரென்ச் ப்ரைஸ் போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே போல, கார்போஹைட்ரேட் நிறைந்த பானங்களை பருகுவதும் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பாதிக்கும்.

சிப்ஸ், பிரென்ச் ப்ரைஸ் போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே போல, கார்போஹைட்ரேட் நிறைந்த பானங்களை பருகுவதும் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பாதிக்கும்.ஹெட்ஃபோன்களை அதிக சத்தத்துடன் பயன்படுத்துவது மூளை நரம்புகளை பாதிக்கும். உடலுக்கு சரியான அளவு வேலை கொடுக்காமல் ஒரே இடத்தில் படுத்திருப்பது, அமர்ந்திருப்பதும் மூளையின் செயல்பாட்டை குறைத்து மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன

அளவுக்கு அதிகமாக புகை பிடிப்பது மூளையின் செயல்பாட்டை குறைக்கிறது. அதுமட்டும் அல்ல, உங்கள் நினைவாற்றலை பாதிப்பதுடன், அல்சைமர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு சூரிய ஒளி அவசியம். அந்த வகையில் சூரிய ஒளியை தவிர்த்து அதிக நேரம் இருட்டில் இருப்பதும் உங்கள் மூளையின் செயல்பாட்டை பாதிக்கும்.

Kokila

Next Post

இந்திய ரூபாயிலேயே வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு பேமெண்ட்!... 18 நாடுகளுக்கு ஒப்புதல் அளித்த ரிசர்வ் வங்கி!... விவரம் உள்ளே!

Sat Mar 18 , 2023
இந்திய இறக்குமதியாளர்கள் டாலர், யூரோ போன்ற நாணயங்கள் அல்லாமல் இந்திய ரூபாயிலேயே வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு பேமெண்ட் செய்யும் வகையில் 18 நாடுகளின் வங்கிகளுக்கு வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. பிப்ரவரி 2022ல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு பெரிய பாதிப்பை எதிர்கொண்டது மட்டும் அல்லாமல் அதிகளவிலான பாதிப்பை வர்த்தக சந்தை, பொருளாதாரம், விலைவாசியிலும் எதிர்கொண்டது. இந்த நிலையில் […]

You May Like