வெளி நாடுகளுக்கு இல்லையென்றால் கூட பரவாயில்லை, வெளி மாநிலங்களுக்காவது விமானத்தில் ஒரு முறை பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால் பயணம் செல்ல விரும்பினால் மட்டும் போதுமா, விமானத்தின் டிக்கெட் விலைக்கு பதில் நாம் ரயில்களிலோ அல்லது பஸ்களிலோ சென்று விடுவோம். குறைந்த பட்ஜெட்டில் விமான டிக்கெட் கிடைத்தால் விமானத்தில் பயணிக்கலாம் என்று காத்துக்கிடப்பவர்களுக்கு இதுவே சரியான நேரம். ஆம், நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், சுதந்திர தினத்தை முன்னிட்டு குறைந்த விலையில் பயணம் செய்யும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கியுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சுதந்திர தின விற்பனையின் கீழ் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ.1,515க்கு விமான டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. ஸ்பைஸ்ஜெட்டின் இந்த ஆஃபர் நேற்று(ஆகஸ்ட் 14) முதல் ஆகஸ்ட் 20 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் தன்னுடைய பயணிகளுக்கு ரூ.2,000 வரையிலான இலவச விமான வவுச்சர்களையும் வழங்கி வருகிறது. இது மட்டுமில்லாமல் ரூ.15க்கு பயணிகளுக்கு விருப்பமான இருக்கையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இதனால் ஜன்னல் ஓர இருக்கைகளை தேர்ந்தெடுத்து, இயற்கை அழகை ரசித்துக்கொண்டே பயணிக்கலாம், அதுவும் வெறும் 15 ரூபாயில்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இந்தச் சலுகை ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். மேலும் இந்த தேதிக்குள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கான பயணம் ஆகஸ்ட் 15, 2023 முதல் மார்ச் 30, 2024க்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1515-ல் மும்பை-கோவா, ஜம்மு-ஸ்ரீநகர், கோவா-மும்பை, கவுகாத்தி-பாக்டோக்ரா, சென்னை-ஹைதராபாத் போன்ற இடங்களுக்குச் செல்ல டிக்கெட்டுகள் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு https://www.spicejet.com/ என்ற இணைய முகவரிக்கு சென்று பார்க்கலாம்.