fbpx

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் பிளஸ் 2 படிக்கலாமா..? சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் வி.மலம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு மாணவர் ஒருவர் கடந்த 2022ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். அதில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் தோச்சி பெறவில்லை. இதனால், ஆகஸ்ட் மாதம் மறுதேர்வு எழுதினார். இதில் கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளார். அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வில் 25 மதிப்பெண்ணும், எழுத்து தேர்வில் 15 மதிப்பெண் மட்டுமே பெற்றார். மொத்தம் இதில் 40 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், எழுத்து தேர்வில் 20 மதிப்பெண்கள் பெறவில்லை என்பதால் அந்த பாடத்தில் தோல்வி அடைந்தார். அவர் மீண்டும் மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே 11ஆம் வகுப்பில் சேர முடியும்.

இந்நிலையில், 10ஆம் வகுப்பு மாணவனோ தான் அறிவியலில் 40 மார்க் எடுத்துவிட்டதால், தேர்ச்சி பெற்றுவிட்டதாக நினைத்து 11ஆம் வகுப்பில் சேர விண்ணப்பித்துள்ளான். அந்த சமயத்தில் சான்றிதழ்களை ஆசிரியர்கள் சரியாக கவனிக்காமல் விட்டதால், 11ஆம் வகுப்பு சேர்ந்துவிட்டான். அறிவியலில் தேர்ச்சி பெறாத மாணவனை பிளஸ்-1 வகுப்பில் ஆசிரியர்கள் சேர்த்துக்கொண்டனர்.

அந்த மாணவன் தற்போது பிளஸ்-1 தேர்ச்சி பெற்று பிளஸ்-2 படித்து வந்திருக்கிறான். இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்வு வர உள்ளதால், மாணவர்களின் சான்றிதழ்கள் பள்ளி மூலம் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு மாணவனின் சான்றிதழை அதிகாரிகள் ஆய்வு செய்து 10ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த நிலையில், பிளஸ்-2 படித்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதன்பிறகுதான் நடந்த தவறு அந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. உடனடியாக அந்த மாணவனை பள்ளியில் இருந்து விடுவித்து மீண்டும் 10ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்து, அதன் பின்னர் பிளஸ்-2 தேர்வு எழுத முடியும் எனக் கூறினார்கள். மேலும், மாணவனின் பெற்றோரை அழைத்து, பள்ளி தலைமை ஆசிரியர் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு மாணவனை பள்ளியில் இருந்தும் வெளியேற்றினார்கள்.

இதற்கிடையே, 10ஆம் தேர்ச்சி பெறாத மாணவனை பள்ளியில் எப்படி சேர்த்தார்கள்? என்று சிவகங்கை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் நேரில் சென்று விசாரித்தனர். இது கவனக்குறைவால் நடந்த தவறு என்பது தெரியவந்துள்ளது.

Chella

Next Post

இன்னும் என்னென்ன சம்பவம் இருக்கோ?... தமிழ்நாட்டில் கடுமையான புயல் வீசும்!… வைரலாகும் பஞ்சாங்க எச்சரிக்கை!

Thu Nov 30 , 2023
கார்த்திகை மாதத்தில் தமிழ்நாட்டில் கடுமையாக புயல் வீசும் என்று முன்பே கணித்து எழுதப்பட்ட தமிழ் பஞ்சாங்கம் தற்போது வைரலாகி வருகிறது. பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் வானியல் நூல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் […]

You May Like