மிகவும் ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்று தான் சிறுதானியங்கள். சிறுதானியங்கள் அதிக சத்துக்கள் உள்ளது. இதனால் உடலுக்கு தேவையான பல நண்மைகள் நமக்கு சுலபமாக கிடைத்து விடுகிறது. நமது முன்னோர் பெரும்பாலும் சிறுதானியங்களை தான் பயன்படுத்தினர். ஆனால் காலங்கள் மர மாற, நாகரீகம் என்ற பெயரில் உணவு வகைகளும் மாறிவிட்டது. ஆனால் தற்போது மீண்டும் பலர் சிறுதானியங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் ஒரு பக்கம் நன்மை என்றாலும், மறுபக்கம் சிறுதானியங்களை சாப்பிடும் போது ஒரு சில தவறுகளை செய்து விடுகிறோம். சிறுதானியங்களை சரியாக பயன்படுத்தும் போது தான், அதன் பலன் முழுமையாக கிடைக்கும். அதனால், சிறுதானியங்கள் சாப்பிடும் போது நாம் செய்யும் தவறுகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
பாலிஷ் செய்த சிறுதானியங்களை சாப்பிடுவதால், பெரும்பாலான சத்துக்கள் நமக்கு கிடைப்பது இல்லை. இதனால் பாலிஷ் செய்யாத சிறுதானியங்களை வாங்கி பயன்படுத்துவது நல்லது. இதற்க்கு நீங்கள், கிராமப்புறங்களில் அல்லது மற்றும் சின்ன சின்ன கடைகளில் கிடைக்கும் பட்டை தீட்டப்படாத சிறுதானியங்களை வாங்கி, அதை நன்கு கழுவி பயன்படுத்தலாம். சாமை, திணை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை சமைக்கும் போது, சுமார் 8 முதல் 10 மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். இதனால் நீங்கள் இரவே ஊற வைத்து விடுவது நல்லது. இல்லையென்றால், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.
புதிதாக சிறுதானியம் சாப்பிடுபவர்கள், மதிய நேரத்தில் சாப்பிடுவது நல்லது. மேலும், முடிந்தவரை சிறு தானியங்களை குக்கரில் சமைப்பதை தவிர்ப்பது நல்லது. சிருதாநியங்களை வடித்து சாப்பிடுவது தான் நல்லது. நீரிழிவு நோயாளிகள், சிருதாநியங்களை கூலாகவோ அல்லது கஞ்சாவோ குடிக்கக்கூடாது. மாறாக, முழு தானியங்களாக போட்டு குழைய விட்டு கஞ்சியாக எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக பலர், சிறுதானியங்களை சத்துமாவு அல்லது பிஸ்கட் வடிவில் சாப்பிடுவது உண்டு. சிறு தானியத்தை அரைத்தாலே அதில் உள்ள சத்துக்கள் போய்விடும். இதனால் சிறுதானியங்களை முழு தானியங்களாக எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. மேலும், ஒரு நாளைக்கு ஒரு தானியம் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Read more: ரேஷன் அரிசி சாப்பிட்டால் இந்த நோய்கள் வராது… இனி வேஸ்ட் பண்ணாதீங்க..