fbpx

சட்டப்பிரிவு 164-ன் கீழ் அமைச்சரை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய முடியுமா…? சட்டம் என்ன சொல்கிறது…? முழு விவரம்…

கடந்த 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையில் குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சைகள் முடிந்து தற்பொழுது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் ஜூலை 12ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் இருப்பதாலும், அவர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அவர் அமைச்சராகத் தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறி ஆளுநர் தகுதி நீக்கம் செய்துள்ளார். அமைச்சரவையில் இருந்து நீக்கும் அதிகாரமும் ஆளுநருக்கு இல்லை என பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சட்டம் என்ன சொல்கிறது..?

அமைச்சரவையின் ஆலோசனையின்றி ஆளுநர் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, முதலமைச்சராக பொறுப்பேற்க தகுதியான நபரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டுமே ஆளுநருக்கு உள்ளது. முதலமைச்சரின் பரிந்துரைப்படியே, அமைச்சர்களை ஆளுநர் நியமித்து வருகிறார். ஆனால், அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 164(1)இன்படி, முதலமைச்சரின் ஆலோசனையின் பேரிலேயே ஆளுநர் செயல்பட வேண்டும் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.

ஆனால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 159 ன் படி கவர்னர் தான் எடுத்த உறுதி மொழியை காப்பாற்ற வேண்டும். 164-1ன் படி செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது ஆளுநருக்கு திருப்தி அளிக்கவில்லை இதனால் அவரை பொறுப்பிலிருந்து நீக்குவதற்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தனது கருத்தை தெரிவித்துள்ளார் ‌.

Vignesh

Next Post

அரசு வழங்கும் ரூ.5 லட்சம் காசோலை + விருது…! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...!

Fri Jun 30 , 2023
துணிவு மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது- ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில்‌, ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும்‌ மற்றும்‌ ஒரு,பதக்கமும்‌ அடங்கும்‌, தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த, துலசிச்சலான மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்‌ புரிந்தபெண்‌ விண்ணப்பதாரர்‌ மட்டுமே இவ்விருதினைப்‌ பெறத்‌ தகுதியுள்ளவர்‌. 2023-ஆம்‌ ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள்‌, விரிவான தன்விவரக்‌ குறிப்பு, உரிய விவரங்கள்‌ மற்றும்‌ அதற்குரிய விண்ணப்பித்தை […]

You May Like