fbpx

மாரடைப்பு ஏற்பட போவதை நம்மால் முன்பே உணர முடியுமா….? அப்படி ஏற்பட்டால், நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி….?

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பல இளைஞருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. வயதான நபர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமான விஷயம் தான். இளம் வயதை சார்ந்தவர்களுக்கு கூட இந்த மாரடைப்பு ஏற்படுவது இன்றைய உணவு முறையின் காரணமாகத்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

இளைஞர்களை ஒரு புறம் வைத்தால் ,இன்னொரு புறம் சிறுவர், சிறுமிகளுக்கு கூட இந்த மாரடைப்பு தற்போது ஏற்படுகிறது. இதெல்லாம் எதை காட்டுகிறது என்றால், தற்காலத்து உணவு முறை பழக்க, வழக்கங்கள் சரியான முறையில் உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதில்லை என்று தோன்றுகிறது.

ஆனால், இப்படி திடீர், திடீர் என்று மாரடைப்பு ஏற்படுவதால், பலர் பல்வேறு இழப்புகளை சந்திக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தான், இந்த மாரடைப்பு வரப்போகிறது என்பதை பற்றி எப்படி நாம் முன்பே அறிந்து கொள்ளலாம் என்று பலர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, மாரடைப்பு ஏற்பட போவதற்கு ஒரு நாளுக்கு முன்பாகவே அதன் அறிகுறி நம்முடைய உடலில் தென்படும் என்று கூறப்படுகிறது. அதனை நாம் சரியாக கணித்து விட்டால், நம்மை மாரடைப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

அதாவது, இதயத்துடிப்பு அதிகரிப்பது, மூச்சுத் திணறல் ஏற்படுவது, வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்டுபவது, நெஞ்சு வலி, மயக்கம் உண்டாவது போன்ற அறிகுறிகள் மாரடைப்பு ஏற்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆகவே, இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, மருத்துவ ஆலோசனை பெற்று, உங்களை நீங்கள் மாரடைப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

அதே நேரம், இந்த மாரடைப்பு அறிகுறிகள் ஆண், பெண் என இரு பாலருக்கும், வேறுபட்டு காணப்படும் என்று கூறப்படுகிறது. அந்த விதத்தில், பெண்களுக்கு இந்த மாரடைப்பு ஏற்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே மூச்சு விடுவதில் சிரமம் உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேநேரம் ஆண்களுக்கு நெஞ்சு வலி ஏற்படுவதை போன்ற உணர்வு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

ஆகவே உங்களுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால், அலட்சியமாக விட்டு விடாமல், உடனடியாக மருத்துவரை அணுகினால், நிச்சயமாக மாரடைப்பிலிருந்து உங்களை காப்பாற்ற முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகவே இதனை படித்து தெரிந்து கொண்டு நீங்களும் பயன்பெறுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இது பற்றி சொல்லுங்கள். ஏனென்றால், நம் உயிரை நாம் காப்பாற்றிக் கொள்வது பெரிதல்ல, நமக்கு தெரிந்த ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு, அடுத்தவர் உயிரையும் காப்பாற்றினால், அது நம்முடைய மிகப்பெரிய பாக்கியமாக கருதப்படும்.ஆகவே  நீங்கள் தெரிந்து கொண்ட இந்த செய்தியை மற்றவருக்கும் சொல்லுங்கள்.

Next Post

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்..!! 2 பேர் மட்டுமே எதிர்ப்பு..!!

Thu Sep 21 , 2023
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். மசோதாவை கொண்டு வர கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்றத்தில் முதல் அலுவலாக தாக்கலானது. இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை […]

You May Like