fbpx

சரியா தூங்கலனா புற்றுநோய் வருமாம்?… இனிமே நைட் டைம்ல போன் பார்க்காம தூங்குங்க!… ஆய்வில் அதிர்ச்சி!

நம்மில் பலருக்கு தனிப்பட்ட வாழ்க்கையாலும் தங்களின் தொழில் வாழ்க்கையினாலும் இரவில் படுத்தால் தூக்கம் வரவில்லை என்று கூறுகின்றனர். சமீபத்தில் நடத்தப்படும் மருத்துவ ஆய்வுகளில் சரியான தூக்கம் இல்லாததால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. மருத்துவர்கள், இரவு 10-11 மணிக்குள்ளாக உறங்க சென்று விட வேண்டும் என்றும், 6-7 மணி நேரமாவது சராசரியாக உறங்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் பலருக்கு அவர்கள் இரவில் உறங்கும் நேரமே மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தூக்க நேரம் குறைவாக இருப்பவர்களை விட, சரியான நேரம் தூங்குபவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என சமீபத்திய மருத்துவ ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், யார் 6 முதல் 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறார்களோ அவர்கள் உடலில் புற்றுநோய் பரவும் அபாயம் 59 சதவிகிதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலுக்கு தண்ணீர், உணவு எந்த அளவிற்கு தேவையோ அதே அளவிற்கு சரியான நேரம் தூங்குவதும் தேவையானதுதான். நம் உடலில், சர்காடியன் ரிதம் என்ற ஒன்று உள்ளது. இது, நம் உடலில் உள்ள நேச்சுரலான கடிகாரமாகும். இது, நாம் தூங்கும் நேரம், எழுந்து கொள்ளும் நேரம் ஆகியவற்றை இதுதான் தீர்மானிக்கும். எனவே, நாம் நம் உடலுக்கு தேவையா தூக்க நேரத்தை தினமும் கடைப்பிடிக்கவில்லை என்றால் இது, கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உடலில் நோய் தாங்கும் ஆற்றலை குறைத்து விடும். இதனால் மார்பகம், கருப்பைகள், சிறுநீர்ப்பை ஆகியவற்றை பாதிக்கும். சரியான தூக்கம் இல்லாததால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதனால் உடலில் உள்ள கேன்சர் செல்கள் அதிகரிக்கவும் செய்யலாம் என மருத்துவர்களால் கூறப்படுகிறது.

சரியான தூக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும்? இரவில் தூங்க செல்வதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன்னர் கண்டிப்பாக செல்போன், டிவி, டேப் உள்ளிட்டவற்றை உபயோகிப்பதை நிறுத்திவிடுங்கள். உறங்கும் போதும் உங்கள் செல்போனை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவதை தவிர்க்கவும். இரவு உணவுக்கு பிறகு பலருக்கு காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். படுக்க செல்வதற்கு முன்னர் கண்டிப்பாக காபு அல்லது டீ பருகுவதை நிறுத்தவும். சில சமயங்களில் அதிக சோர்வு இருப்பதால் கூட உறக்கம் வராமல் இருக்கும். எனவே, தூங்க செல்வதற்கு முன்னர் சூடான தண்ணீரில் ஒரு குளியலை போடுங்கள். இது, இரவில் நல்ல உறக்கம் வருவதற்கு உதவும்.

Kokila

Next Post

ஒரு வங்கிக் கணக்கில் இத்தனை UPI ஐடிகளை உருவாக்க முடியுமா?… எப்படி தெரியுமா?

Sun Dec 17 , 2023
இந்தியாவில் மில்லியன் கணக்கான UPI பயனர்கள் உள்ளனர். இது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (NPCI) கடந்த 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது பணமதிப்பிழப்புக்குப் பிறகு அதிக பயன்பாட்டைக் கொண்டுள்ளது. பலர் ஆன்லைன் கட்டண முறைக்கு மாறிவிட்டனர். அதன் பிறகு மில்லியன் கணக்கான பயனர்கள் இப்போது UPI வசதியைப் பயன்படுத்துகின்றனர். NPCI அமைப்பால் தொடங்கப்பட்ட ஆன்லைன் கட்டண முறை UPI என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு இடைநிலை நிகழ் நேர […]

You May Like