புற்றுநோயை எளிதில் குணப்படுத்தும் வகையில் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.பல தசாப்தங்களாக வரையறுக்கப்பட்ட வெற்றிக்குப் பிறகு, விஞ்ஞானிகள் ஆராய்ச்சி ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளது. அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய புற்றுநோய் மையம், புற்றுநோய்க்கு தடுப்பூசிகள் உட்பட பிற நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது.
இந்த நிறுவனம் தடுப்பூசிக்கான ஆராய்ச்சி பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசி குறித்து டாக்டர் ஜேம்ஸ் குல்லி கூறுகையில்; புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அடுத்த பெரிய முன்னேற்றம் இந்த தடுப்பூசியாக இருக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான தடுப்பூசிகள் வெளிவரலாம். புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்க தடுப்பூசிகள் உதவும் என கூறினார்.