fbpx

மம்தா பானர்ஜி இல்லாத I.N.D.I கூட்டணியை யோசித்து கூட பார்க்க முடியாது…! காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து…!

மம்தா பானர்ஜி இல்லாத இண்டியா கூட்டணியை யோசித்து கூட பார்க்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்; காங்கிரஸ் கட்சியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. நான் ஏற்கனவே மேற்கு வங்கத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று கூறி வந்தேன். மேற்கு வங்கத்தில் பாஜகவை நாங்கள் தோற்கடிப்போம்.

நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்த அனைத்து முன்மொழிவுகளையும் அவர்கள் நிராகரித்தார்கள். அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் முடிவை நாங்கள் எடுத்தோம். நாங்கள் இண்டியா கூட்டணியில் இருக்கும் நிலையிலும், ராகுல் காந்தியின் யாத்திரை மேற்கு வங்கம் வழியாக செல்வதை மரியாதைக்காக கூட எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு எங்களுடன் எந்த உறவும் இல்லை என கூறி இருந்தார்.

மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ள நிலையில், “இண்டியா கூட்டணியின் முக்கியமான தூணாக திரிணமூல் காங்கிரஸ் இருக்கிறது. மம்தா பானர்ஜி இல்லாத இண்டியா கூட்டணியை யோசித்து கூட பார்க்க முடியாது. எங்களது பேச்சுவார்த்தை தொடர்கிறது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

முதன்முறையாக மதுக் கடையை திறக்கும் சவுதி!… `விஷன் 2030' திட்டத்தின்கீழ் அடுத்த முயற்சி!… நிபந்தனைகளும் அறிவிப்பு!

Thu Jan 25 , 2024
மது விற்பனைக்குத் தடை செய்யப்பட்டுள்ள சவுதி அரேபியாவில், முதன்முறையாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான அறிவிப்பை இளவரசர் முகமது பின் சல்மான் வெளியிட்டுள்ளார். இஸ்லாமிய நாடுகளில் மது அருந்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் சவுதி அரேபியாவும் ஒன்று. இஸ்லாமிய ஆட்சி முறை நடைமுறையில் இருக்கும் சவுதி அரேபியாவை, அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசு, ஆட்சி செய்து வருகிறது. இவர் தன் ஆட்சியில், எண்ணெய் வளத்தைக் கடந்து, […]

You May Like