fbpx

கேப்டன் விஜயகாந்த் மறைவு..!! நாளை தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் ரத்து..!!

கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக திரைத்துறை சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்ததும் ஏராளமான தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை ஒரு நாள் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும். தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு பாதை அமைத்து, அதில் அனைவரையும் ஒருங்கிணைத்தவர் விஜயகாந்த். கலைஞர், எம்ஜிஆர். ஜெயலலிதா ஆகியோரிடம் அன்பு பாராட்டியவர் விஜயகாந்த் என தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

Chella

Next Post

"பாளாய் போன சண்டை."! பலியான 4 வயது பெண் குழந்தை.! 2 உயிர் ஊசல்.!

Thu Dec 28 , 2023
தஞ்சாவூர் மாவட்டத்தில் குடும்பத்த தகராறு காரணமாக எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் 4 வயது சிறுமி பலியான நிலையில் தாய் மற்றும் அவரது சகோதரி தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். விவசாயியான இவருக்கு திருமணமாகி விஜயா(27) என்ற மனைவியும் அனுஸ்ரீ(7) மற்றும் அகஸ்டி(4) என்ற 2 பெண் […]

You May Like