fbpx

தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் வைக்கப்படுகிறது..!!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த், கொரோனா தொற்று காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற விஜயகாந்த், பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது.

இந்நிலையில், விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது தேமுதிக தொண்டர்களை மட்டுமல்லாது தமிழக மக்களையும் அதிர்ச்சியடைய செய்தது. மரணம் அறிவிக்கப்பட்ட உடனேயே அவரது உடல், சாலிகிராமம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவரது உடலை பார்த்த தொண்டர்கள், ரசிகர்கள் கதறி அழுதனர். அவரது வீட்டின் முன்பு இருக்கும் தேமுதிக கொடி கம்பத்தில் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கேப்டன் உடல் சென்னை கோயம்பேடில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

Chella

Next Post

கேப்டன் விஜயகாந்த் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம்..!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

Thu Dec 28 , 2023
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘’அன்பிற்கினிய நண்பர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர். நடிகராக, நடிகர் சங்க தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் […]

You May Like