fbpx

கிடு கிடுவென உயர்ந்த கேரட் விலை … அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

கேரட் விலை தொடர்ந்து கிடு கிடுவென உயர்ந்து உச்சத்தில் இருப்பதால் இல்லத்தரசிகள்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காய்கறிகளிலேயே கேரட் விலை தாறுமாறாக ஏறி புதிய உச்சத்தில் உள்ளது. கேரட்டின் விலை கடந்த ஆகஸ்ட் மாதத்தில்இருந்ததை விட இரண்டுமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கேரட்டை வாங்க முடியாமல் இல்லத்தரசிகள் திணவி வருகின்றனர்.

கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ கேரட் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. வெளிச் சந்தையில் ஒரு கிலோ கேரட் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. புரட்டாசி மாதம் என்பதால் பொதுவாகவே காய்கறி விலை சற்று கூடுதலாக இருக்கும். ஆனால் கேரட் விலை அதிகரித்திருப்பது திடுக்கிடச் செய்துள்ளது. இதனால் சிலர் கேரட் பக்கம் தலையை காட்டாமல் செல்கின்றனர்.

ஒரு நாளைக்கு 400 முதல் 500 முட்டைகள் மட்டுமே சந்தைக்கு வருகின்றது. தற்போது முருங்கைக்காய் , அவரைக்காய் , பீன்ஸ் , வெங்காயம் போன்ற சில காய்கறி விலை குறைவாக உள்ளது. மேலும் பல இடங்களில்மழை பெய்து வருவதால் காய்கறிகள் விலை ஏற்றமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Post

ஜவுளிக்கடை விளம்பரத்தால் அலைமோதிய கூட்டம்; வாடிக்கையாளர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்...!

Wed Sep 28 , 2022
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருக்கும் பிரபல ஜவுளி கடையின் நான்காவது வருட தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் முதலில் வரும் 400 பேருக்கு எந்த ஆடை எடுத்தாலும் ஒரு ஆடை 4 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்து இருந்தனர். இதனை அறிந்த பொதுமக்கள் காலை 8 மணி முதலே கடையில் வந்து குவிந்தனர். இதனால் கடை இருக்கும் ருக்மணிபாளையம் ரோட்டில் போக்குவரத்து […]

You May Like