இந்திய திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவின் (DPIFF) ஏற்பாட்டாளர்கள் மீது மும்பை காவல்துறை மோடடி வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவை நடத்துவதற்கு மத்திய அரசின் ஆதரவைக் கூறி, பல்வேறு மாநில அரசுகளையும், பஞ்சாப் நேஷனல் வங்கி, சினிபோலிஸ் மற்றும் பிவிஆர் ஐனாக்ஸ் போன்ற நிறுவனங்களையும் நிதியுதவிக்காக ஏமாற்றியதாக, மும்பை காவல்துறை, அதன் ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற முக்கிய அரசியல் தலைவர்களின் ஆதரவைப் பொய்யாகக் கூறி நிகழ்வை நம்பகமானதாகக் காட்டுவதற்காக, மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் முன்னாள் உறுப்பினரான மிஸ்ரா, அவரது மனைவி பார்வதி மிஸ்ரா மற்றும் அவர்களது மகன் அபிஷேக் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அனில் மிஸ்ரா ஆரம்பத்தில் சினிமா தயாரிப்பாளர் ஒருவரிடம் உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார். அதன் பிறகு அனில் மிஸ்ரா சொந்தமாக தாதாசாஹேப் பால்கே சர்வதேச திரைப்படவிழா விருதுகள் என்ற ஒன்றை தொடங்கி விருதுகளை விற்பனை செய்து வந்துள்ளார். அவருடன் அவரது மகன் அபிஷேக் மிஸ்ரா, மனைவி பார்வதி, மகள் ஸ்வேதா ஆகியோரும் சேர்ந்து விருதுகளை விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
வணிக ரீதியாக தோல்வியடைந்த நடிகர்களிடமிருந்தும் மிஸ்ரா பணம் வசூலித்து, விருதுக்கு ஈடாக பணம் வசூலித்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்காக அரசு மற்றும் அரசு துணை நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் ஸ்பான்சர்ஷிப் பெற்றுள்ளார். வரும் 20ம் தேதி பாந்த்ராவில் உள்ள தாஜ் லேண்ட் எண்ட் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அனில் மிஸ்ரா ஏற்பாடு செய்திருந்தார்.
இதற்கான அனுமதியை சர்வதேச டூரிஸம் பெஸ்டிவல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் பெற்று இருந்தது. ஆனால் அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டுவிட்டது. அனில் மிஸ்ரா தவறான தகவலை சொல்லி சினிமா விருதுக்கு அனுமதி பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது அனில் மிஸ்ரா, அவரது மகன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து இது குறித்து மேற்கொண்டு விசாரித்து வருவதாகவும், விருது விழாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்வதற்கான வேலையில் ஈடுபட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Read more : அதிர்ச்சி..!! 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை..!! தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை கைது..!!