மும்பையில் மொஹரம் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களைக் குறிவைத்துத் தீட்டப்பட்ட சதித்திட்டத்தை மும்பை காவல்துறை முறியடித்துள்ளது. இதன் மூலம் ஒரு பெரும் துயரத்தைத் தடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மத ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களிடையே ‘ஜிங்க் பாஸ்பைடு’ (zinc phosphide) எனப்படும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் நிரப்பப்பட்ட காப்ஸ்யூல்களை (மாத்திரைகள் போன்ற வடிவம்) விநியோகிக்க ஒரு நபர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கானோரின் உயிருக்கு […]

மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர்-தயாரிப்பாளர் கமல் ஆர் கான் இன்று மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மும்பையின் ஓஷிவாராவில் உள்ள நாலந்தா அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மற்றும் இந்த வழக்கில் கமல் ஆர் கான் கைது செய்யப்பட்டார்.. மும்பையில் கமல் ஆர் கான் கைது: என்ன நடந்தது? கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையின் ஓஷிவாராவில் […]

டெல்லியில் ஓய்வுபெற்ற வங்கியாளரான 78 வயதான நரேஷ் மல்ஹோத்ரா, தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.23 கோடியை சைபர் குற்றவாளிகளிடம் இழந்தார்.. அவர் “டிஜிட்டல் கைது” செய்யப்பட்டார். ஆகஸ்ட் 4 ஆம் தேதி மும்பை காவல்துறை அதிகாரி என்று கூறிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தபோது இந்த மோசடி தொடங்கியது. இது செப்டம்பர் 4 ஆம் தேதி வரை தொடர்ந்தது, அதன் பிறகு மோசடி செய்பவர்கள் அவரைத் தொடர்பு கொள்வதை […]