கரூரில் தேர்தல் கண்காணிப்பு குழுவினரை பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாச வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மக்களவை அதிமுக வேட்பாளர் எல்.தங்கவேலை ஆதரித்து வாங்கல் பகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் விதிகளை மீறி 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்றுள்ளனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார் வாகனங்கள் அணிவகுத்து வர தேர்தல் விதிமுறைப்படி அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஒன்றியச் செயலாளர் மதுசூதனன், உள்ளிட்டோர் தேர்தல் அலுவலரின் வாகனத்தை மறித்து அவரை ஆபாசமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்து, தாக்க முற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கரூரில் தேர்தல் கண்காணிப்பு குழுவினரை பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாச வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.