நியாய விலை கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையிலான பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ஏழை, எளிய மக்கள் மிகுந்த பயனடைந்து வருகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் அரசின் நிதி உதவியும், ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது இத்தகைய நிலையில் தான், கர்நாடக மாநிலத்தில் அரிசிக்கு பதிலாக பணத்தை வழங்குவதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.
அரிசி கொள்முதல் செய்து பொது சப்ளை செய்யும் வரையில் ஒரு கிலோவிற்கு 34 ரூபாய் வீதம் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைத்தால் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கின்ற குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று அந்த கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
இந்த நிலையில், தற்சமயம் அரிசி கையிருப்பு இல்லாததன் காரணமாக, அதனை பணமாக வழங்க முடிவு செய்து இருக்கிறது அந்த மாநில அரசு இந்த பணமானது இன்று முதல் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.