fbpx

சாதிய நெருக்கடி..!! கூகுள் டூடுல் கௌரவித்த பி.கே.ரோஸி..!! யார் இந்த நாயகி..??

இந்தியாவின் 4-வது பெரிய திரைப்படத்துறையாகக் கருதப்படுவது கேரள திரைத்துறை. தென்னிந்தியாவின் மலையாள மொழியில் இருந்து வெளியாகும் திரைப்படங்களின் ஒளிப்பதிவு மற்றும் கதை சார்ந்த யதார்த்தத்திற்காக இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. நாட்டில் பெண்கள் பல்வேறு ஒடுக்குமுறைக்கு ஆளான காலகட்டத்தில் பட்டியலின பிரிவைச் சேர்ந்த பி.கே.ரோஸி என்பவர் கேரளாவில் 1930ஆம் ஆண்டு வெளிவந்த முதல் படமான ‘விகதகுமாரன்’ என்னும் வசனங்களற்ற திரைப்படத்தில் நடித்தார். ஜே.சி. டேனியல் தயாரித்து இயக்கிய இப்படம் ஒரு நாயர் பெண்ணை மையமாகக் கொண்டது. அந்த நாயர் பெண் வேடத்தில் பி.கே. ரோஸி நடித்திருந்தார். மேலும், காக்கராஷி என்ற தமிழ் நாடக வடிவத்தில் மிகத் திறமையான நடிப்பை பெற்றிருந்த பி.கே. ரோஸியை அடையாளம் கண்டு கேரளத்தில் எந்தப் பெண்ணும் நடிக்க முன்வராத சூழலில் முதல் படத்திலேயே ரோஸியை நடிக்க வைத்தவர் ஜே.சி. டேனியல்.

இவர் நடித்த திரைப்படத்தை, பார்க்க வரக்கூடாதென நாயர் சமூகத்தில் பெரும் செல்வந்தர்களாக இருந்தவர்களும் சமூகத்தில் செல்வாக்குடன் இருந்தவர்களும் ரோஸியை தடுத்துள்ளனர். மேலும், தியேட்டர்களை கற்கள் கொண்டு வீசியும், ஸ்கிரீனை கொளுத்தியும் தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர். பல்வேறு நெருக்கடிகளுக்காளாகி கேசவப்பிள்ளை என்பவரை மணந்து தமிழ்நாடு வந்தவர் ராஜம்மாளாக அடையாளங்கள் மறைத்து வாழ்ந்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 2022ஆம் ஆண்டு அவரது வாழ்க்கையைத் தழுவி ‘பிகே ரோஸி’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தை சசி நடுக்காடு என்பவர் இயக்கியிருந்தார்.

இந்தியாவின் கேரளத்தில் பிறந்த பட்டியலினப் பெண்ணான ரோசம்மா பின்பு பி.கே.ரோஸியாகி சாதிய நெருக்கடியால் ராஜம்மாளாக வாழ்ந்து மறைந்துள்ளார். இந்நிலையில் இன்று அவருக்கு 120 ஆவது பிறந்த நாளில் பி.கே. ரோஸிக்கு புகழ்சேர்க்கும் விதமாக Google Doodle பி.கே. ரோஸியின் புகைப்படத்தை வடிவமைத்து கௌரவித்திருக்கிறது.

Chella

Next Post

சென்னையில் கல்லூரி மாணவனை கடத்திச் சென்ற வழக்கில் 9 மாணவர்கள் அதிரடி கைது…..!

Fri Feb 10 , 2023
முன்பெல்லாம் ரவுடிசம் என்றால் அந்த ரவுடிசத்தை செய்வதற்கு ஒரு தனி குழு இருக்கும். ஆனால் தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய படிக்கும் வேலையை விட்டுவிட்டு தங்களுடைய கல்லூரியிலேயே ரவுடிசத்தை செய்ய தொடங்கி இருப்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரிஸ்வான் (19) இவர் ராயப்பேட்டையில் இருக்கின்ற நியூ முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். முன்தினம் கல்லூரி முடிவடைந்த பிறகு இவர் தன்னுடைய நண்பர்களுடன் 25g […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like