fbpx

சிறுநீரை அடக்க சிரமப்படுகிறீர்களா.? அது எந்த நோயின் அறிகுறி.? அவற்றின் தீர்வு என்ன.?

சிறுநீர் செயல்பாடு உடலில் அத்தியாவசியமான ஒன்றாகும். இதன் மூலம் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. குளிர்காலங்களில் பொதுவாக அனைவருக்கும் சிறுநீர் அடிக்கடி கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். ஆனாலும் சிறுநீரை அடக்க முடியாத பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலங்களில் இது மிகப்பெரிய அவதியை ஏற்படுத்தும். அவர்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு விட்டால் அதனை கட்டுப்படுத்த சிரமப்படுவார்கள். இந்த சிறுநீர் அடக்க முடியாத நிலை ஏன் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை நிவர்த்தி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்.

சிறுநீர் அடங்கா பிரச்சனை என்பது தன்னிச்சையாக சிறுநீர் கசிவது ஆகும். பெரும்பாலானவர்கள் இது வயது மூப்பின் காரணமாக நடைபெறும் இயல்பான ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மருத்துவத்தில் இவற்றிற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. சிறுநீர் பாதை தொற்று நோய்கள் நீரிழிவு நோய், ப்ராஸ்ட்ரேட் வீக்கம், மெனோபாஸ், கஃபைன் போன்ற பானங்கள் அடிக்கடி பருகுவது மற்றும் அதிக அளவு தண்ணீர் குடிக்காமலிருப்பது போன்றவை இந்த நோய்க்கான அடிப்படை காரணங்களாக இருக்கிறது. மேலும் ஜலதோஷத்தின் போது ஏற்படும் தும்மல் மற்றும் இருமல் இவற்றின் அழுத்தத்தால் கீழ் தசைகள் வலுவிழந்தும் சிறுநீர் அடங்காமை பிரச்சனை ஏற்படலாம்.

பெரும்பாலும் இந்த நோய்க்கு மருத்துவத்தின் மூலமாகவும் வாழ்க்கை முறையில் கொண்டுவரும் மாற்றங்களின் மூலமாகவும் தீர்வு காண முடியும். அரிதான நேரங்களில் இந்த நோய்க்கு அறுவை சிகிச்சையும் தீர்வாக அமைகிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக வாழ்க்கை முறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து பார்க்கலாம். சிறுநீர் அடங்காமை பிரச்சனை இருப்பவர்கள் உடலை நீரேற்றுடன் வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையும்போது சிறுநீர்ப்பைகள் வலுவிழந்து சிறுநீர் அடங்காமை பிரச்சனை உருவாகும். எனவே உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது மூலம் இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்.

மேலும் சிறுநீரை அதிகரிக்க கூடிய தக்காளி கஃபைன் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை டையூரிடிக் தன்மை அதிகம் கொண்டவை. இதனால் சிறுநீர்ப்பை வலுவிழந்து போகும். மேலும் இடுப்பு தசைகளை வலுவடையச் செய்யும் பயிற்சிகளை செய்வதன் மூலமும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். இந்த வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் இதனை சரி செய்ய முடியவில்லை என்றால் மருத்துவரை சந்தித்து தேவையான மருத்துவம் எடுத்துக் கொள்வது நலம் பயக்கும்.

Next Post

2024 நியூமராலஜி.! பிறந்த தேதியால் கொட்டப் போகும் அதிர்ஷ்டம்.!

Wed Dec 20 , 2023
வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டு புது வருடம் ஒவ்வொருவருக்கும் சிறப்பான ஆண்டாக வரவேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒருவரது வாழ்வில் நல்ல நேரம் மற்றும் கெட்ட நேரங்கள் அவர் பிறந்த நேரம் மற்றும் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைவதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. பிறந்த தேதி அவரது கிரகணங்களின் அமைப்பு மற்றும் ராசிகளின் அடிப்படையில் அவருக்கான பாதையை உருவாக்குகிறது. இதில் எண் கணிதம் என்று சொல்லப்படும் நியூமராலஜி முக்கிய பங்கு […]

You May Like