fbpx

அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு…! முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு…!

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு. அதிமுக பிரமுகர் நல்லதம்பி என்பவர் மூலம் 33 பேரிடம் மொத்தம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகார். 2021ல் பதியப்பட்ட வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அடுத்த கட்டமாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது சிபிஐ.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 33 பேரிடம் மூன்று கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, புகார்தாரரான முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி நல்லதம்பி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த உழைக்கும் மீதான விசாரணை ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு. அதிமுக பிரமுகர் நல்லதம்பி என்பவர் மூலம் 33 பேரிடம் மொத்தம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகார். 2021ல் பதியப்பட்ட வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அடுத்த கட்டமாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது சிபிஐ.

English Summary

CBI files case against former AIADMK minister Rajendra Balaji

Vignesh

Next Post

டெல்லி நில அதிர்வு!. ”பெரிய இமயமலை பூகம்பம்” ஏற்படும் ஆபத்து!. விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Tue Feb 18 , 2025
Earthquake in Delhi!. Danger of "Great Himalayan Earthquake"!. Scientists warn!

You May Like