நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019- ஐ மீறியது தொடர்பாக, ஐ.க்யூ.ஆர்.ஏ- ஐ.ஏ.எஸ் நிறுவனத்துக்கு எதிரானப் புகாரை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (சி.சி.பி.ஏ) தலைமை ஆணையர் நிதி காரே மற்றும் ஆணையர் அனுபம் மிஸ்ரா தலைமையிலானக் குழு விசாரித்தது.
2015-2017 ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்கள் குறித்து விதிமுறைகளுக்கு மாறாக விளம்பரம் வெளியிட்டு நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை மேற்கொண்டதற்காக அந்த ஆணையம், ஐ.சி.ஆர்.ஏ ஐ.ஏ.எஸ் நிறுவனத்திற்கு எதிராக இந்த உத்தரவைப் பிறப்பித்தது. சி.சி.பி.ஏ தானாக முன்வந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை முன்வைத்து ஐ.க்யூ.ஆர்.ஏ- ஐ.ஏ.எஸ் நிறுவனம் முக்கியமானத் தகவல்களை வேண்டுமென்றே தவறான தகவல்களை தெரிவித்தது மட்டுமல்லாமல், நுகர்வோரை தவறாக வழிநடத்தியது தெரியவந்தது. இதையடுத்து தவறான தகவல்களை நீக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டதுடன் நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்காக ரூ. 1,00,000 அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.