ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் உணவு பாதுகாப்புத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு ஹோட்டல்களில் சுத்தமின்றி சமைப்பதாக தொடர்ந்து போகிறார்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த வண்ணமாக இருக்கின்றன.
சமையல் செய்யும் இடங்கள் தூய்மையாக இருப்பதில்லை என்றும், சமைத்த உணவுகள் குளிர்சாதனப் பெட்டிகளில் பதப்படுத்தப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுவதால் பல உடல்நலப் பிரச்சனைகள் உண்டாகிறது என்ற புகார் வருகிறது. இதை பொதுமக்கள் நேரடியாக பார்க்கணும் வகையில் சிறிய, பெரிய கடைகள் என அனைத்திலும் கேமராக்கள் பொருத்த வேண்டும்.
இந்த கேமராக்களை மக்கள் நேரலையில் பார்க்கக்கூடிய சாப்பிடும் அறையில் பொருத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் உணவகங்களின் சுகாதார நடைமுறைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை முற்றிலும் தடுக்கலாம் என்ற ஆலோசனையை மக்கள் முன் வைத்து வருகின்றனர். இதனை அரசும் பரிசீலனை செய்யுமாறு பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.