Russia: ரஷ்யாவுடனான 3நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் கூறியுள்ள நிலையில், “போர் ஒப்பந்தம் எங்கள் விதிமுறைகளின்படி இருக்க வேண்டும்” என்று மூத்த ரஷ்ய சட்டமன்ற உறுப்பினர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக, அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உக்ரேனின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கத் தரப்பில் இருந்து வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கலந்துகொண்டார்.
பேச்சுவார்த்தை முடிந்த பின் அமெரிக்கா – உக்ரைன் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட 30 நாள் இடைக்கால போர் நிறுத்தத்தை உடனடியாக ஏற்க உக்ரைன் தயாராக இருக்கிறது. இந்த போர் நிறுத்தக் காலம் இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்பந்தத்தால் நீட்டிக்கப்படலாம். இது ரஷ்ய கூட்டமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே செயல்படுத்துவதற்கும் உட்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரஷ்யா ஏற்றுக்கொண்டவுடன் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அமெரிக்கா உடனடியாக உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவியை மீண்டும் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ரஷ்யா-உக்ரைன் போரில் ஒரு புதிய திருப்பம் உருவாகியுள்ளதால், கவலைகள் அதிகரித்து வருகின்றன. அதாவது, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரில், ரஷ்ய தலையீடு இல்லாமல், 30 நாட்களுக்கு உடனடி போர்நிறுத்தத்திற்கு உக்ரேனிய மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகளின் குழு ஒப்புக்கொண்டது. இதற்கு பதிலளித்த விளாடிமிர் புடின் தலைமையிலான கிரெம்ளின் மாளிகை, ஒப்பந்தத்தின் விவரங்களை அறியாமல் போர்நிறுத்தத் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளது.
ராய்ட்டர்ஸின் அறிக்கையின்படி, தற்போதைய வடிவத்தில் போர்நிறுத்தத்தில் ரஷ்யா உடன்படுவது கடினம் என்று ஒரு மூத்த ரஷ்ய அதிகாரி கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. “ஒரு ஒப்பந்தம் அவசியமானால், அது அமெரிக்க விதிமுறைகளின்படி அல்ல, எங்கள் விதிமுறைகளின்படி இருக்க வேண்டும்” என்று மூத்த ரஷ்ய சட்டமன்ற உறுப்பினர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: பவுர்ணமியையொட்டி இன்று 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்…! போக்குவரத்து துறை அறிவிப்பு…!