fbpx

திரையுலகில் மீண்டும் ஒரு விவாகரத்தா?? ஷாக்கில் ரசிகர்கள்..

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பல போராட்டங்களுக்கு பிறகு தான் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். அதே போல் தான், அவரது தம்பி மணிகண்டனும் மிகவும் கஷ்டப்பட்டு தான் சின்னத்திரையில் சீரியல் வாய்ப்பை பெற்றார். இவர்களின் தந்தை தெலுங்கு நடிகராக இருந்தாலும் கூட, இவரது குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் போதே உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். அதன் பின்னர், ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார் தான், தனது பிள்ளைகளை பல போராட்டங்களுக்கு மத்தியில் வளர்த்தார்.

தங்களின் கல்லூரி படிப்பை, ஐஸ்வர்யா – மணிகண்டன் இருவருமே பார்ட் டைம்மாக வேலை பார்த்துக் கொண்டுதான் முடித்தனர். இந்நிலையில், தன்னுடன் நடித்த நடிகை சோபியாவை மணிகண்டன் ராஜேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். தனது குழந்தையை வளர்க்க, சோபியா திரையுலகில் இருந்து மொத்தமாக விலகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில், இவர் ஹாட்ஸ்பாட் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலிலும் நடித்து வருகிறார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலகலப்பாக இருந்தனர்.

ஆனால் தற்போது, மணிகண்டன் மற்றும் சோபியா தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தற்போது வரை மணிகண்டன் மற்றும் சோபியா இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

Read more: “நா யாருகூட உல்லாசமா இருந்தா உனக்கென்ன” தட்டிக்கேட்ட மாமியாருக்கு, மருமகள் செய்த கொடூரம்..

English Summary

celebrity got divorce

You May Like