சமீபகாலமாக சார்ஜில் உள்ள செல்போன் வெடித்து விபத்த நடந்ததாக தகவல்கள் வந்துள்ளநிலையில் மாணவர் பாக்கெட்டில்வைத்திருந்த செல்போன் வெடித்து படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத.
வேலூரை அடுத்த ராணிப்பேட்டையில் சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி.இவர் இட்லி கடை நடத்தி வருகின்றார். இவரது மகன் முத்து (16) பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகின்றான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது மாமா ஆன்லைனில் செல்போன் வாங்கியுள்ளார்.
ரூ.12 ஆயிரத்துக்கு செல்வோன் வாங்கிய நிலையில் இதை முத்து பயன்படுத்திவந்துள்ளார். நேற்று முத்த செல்போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பைக்கில் தனது உறவினருடன் சென்றுள்ளார். வாலாஜா ரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்று கொண்டிருந்த போது அம்மூர் சாலையில் முத்து பேண்ட் பாக்கெட்டில்வைத்திருந்த செல்போன் வெடித்து தீப்பிடித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த முத்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி பைக்குடன் கீழே விழுந்தார். தொடையில் தீப்பிடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. கீழே விழுந்ததில் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. உடன் வந்த உறவினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரகின்றனர். இது குறித்து சிப்காட் போலீசில் புகார்அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சார்ஜ் போட்டுக் கொண்டிருந்தபோது செல்போன் வெடித்து தீ விபத்த ஏற்பட்டதில் பச்சிளங்குழந்தை உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி நடக்கும் இந்த சம்பவங்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.