fbpx

நிம்மதி…! ரேஷன் கடைகளில் அரிசி விற்பனைக்கு தடை…! வந்தது அதிரடி உத்தரவு…! முழு விவரம் உள்ளே…

ரேஷன் கடைகளில் மார்ச் 2024-க்குள் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; மத்திய அரசு, பொது விநியோகத்திடம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்து மத்திய அரசால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டுவருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணோட்டச்சத்து சேர்ந்து செறிவூட்டப்பட்ட மணிகளாகத் தயார் செய்து செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளை, சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றி, பொது விநியோக‌ திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச் சத்து – இரத்தச் சோகையைத் தடுக்கிறது. ஃபோலிக் அமிலம் – கருவளர்ச்சிக்கும் இரத்த உற்பத்தியாகவும் உதவுகிறது. வைட்டமின் பி12 – நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது. இத்திட்டம் தமிழ்நாட்டில் கடந்த 2020 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அறிமுகத் திட்டமாக செறிவூட்டப்பட்ட அரிசியினை பொதுவிநியோக திட்டத்தின் மூலம் வழங்க அறிவிக்கப்பட்டு 01.10.2020 முதல் 31.03.2022 வரை செயல்படுத்தப்பட்டது.

இதனை ஒன்றிய அரசு நிலை – I, நிலை – II மற்றும் நிலை -III ஆகிய 3 கட்டங்களாகச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு மாநிலம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டு, இந்திய உணவுக் கழகத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி பெறப்பட்டு ஐனவரி 2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 112 மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாகத் தேர்வு செய்துள்ளது. அவற்றில் தமிழகத்தில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாக மத்திய அரசு தேர்வு செய்தது.

இம்மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கு 01.12.2022 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மார்ச் 2024 –க்குள் மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியைப் பொது விநியோக திட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மதிய உணவுத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக செறிவூட்டப்பட்ட அரிசியை இந்திய உணவுக் கழகத்திலிருந்து தற்போது பெறப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

Vignesh

Next Post

கவனம்...! அடுத்த வாரம் வங்கி சேவைகள் பாதிக்கப்படும்...! எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பு...!

Sun Jan 29 , 2023
அகில இந்திய வங்கி வேலைநிறுத்தம் காரணமாக, ஜனவரி 30, 31 தேதிகளில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என்பதால், வங்கி தொடர்பான பணிகளுக்காக அருகிலுள்ள வங்கிகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள வங்கி வாடிக்கையாளர்கள், அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த வாரம் இரண்டு நாள் வேலைநிறுத்தம் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளது. ஜனவரி 30 […]

You May Like