fbpx

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அண்டை நாடான சீனாவில் பரவி வரும் BF.7 புதிய வகை கொரோனா வைரசால் இந்தியாவிலும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மூக்கு வழியாக செலுத்தப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் முதல் கட்டமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஸ்டராக பயன்படுத்தப்பட உள்ள இந்த தடுப்பூசி மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை ஏற்கனவே செலுத்திக்கொண்டவர்கள் மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை போட்டுகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

பாஜக பெண் எம்எல்ஏ உடல்நலக்குறைவால் திடீர் மரணம்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

Fri Dec 23 , 2022
பாஜக பெண் சட்டமன்ற உறுப்பினர் முக்தா திலக் உடல்நலக்குறைவால் காலமானார். புனே நகரில் உள்ள கஸ்பா தொகுதியில் இருந்து மராட்டிய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் முக்தா திலக் (57). இவருக்கு கணவர் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சமீபத்தில் நோய் பாதிப்பு அதிகமாகி 10 நாட்களுக்கு முன்பு புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]
பாஜக பெண் எம்எல்ஏ உடல்நலக்குறைவால் திடீர் மரணம்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

You May Like