பிஎம் மித்ரா பூங்காக்களை 7 இடங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்.
பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடை (பிஎம் மித்ரா) பூங்காக்களை 7 இடங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் இவை அமைக்கப்படவுள்ளன. தமிழகத்தில் விருதுநகர், தெலங்கானாவில் வாராங்கல், குஜராத்தில் நவ்சாரி என்ற பகுதியிலும், கர்நாடகா மாநிலம் கல்புர்கி பகுதியிலும், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மற்றும் ஹர்தோய், மகாராஷ்டிரா மாநிலத்தில் அமராவதி ஆகிய இடங்கள் பிஎம் மித்ரா பூங்காக்களை அமைப்பதற்கு இறுதி செய்யப்பட்டுள்ளன.
இது தவிர ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்தையும் அரசு அமல்படுத்துகிறது. இத்திட்டத்தில் 54 ஜவுளி பூங்காக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவற்றில் 31 ஜவுளி பூங்காக்களுக்கான பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 23 ஜவுளி பூங்காக்களுக்கான பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. தமிழகத்தில் பல்லடம், குமாரபாளையம், கரூர், மதுரை ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்கா பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் தொடர்பான விவரங்களை www.texmin.nic.in. என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.