fbpx

மணிப்பூரில் 9 அமைப்புகளுக்கு தடை…! இரவோடு இரவாக மத்திய உள்துறை அதிரடி நடவடிக்கை…!

மணிப்பூரில் 9 அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மணிப்பூரில் செயல்பட்டு வந்த மைதேயி மக்கள் விடுதலை, புரட்சிகர மக்கள் முன்னணி உள்ளிட்ட 9 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது, நாட்டின் இறையாண்மையை பின்பற்றவில்லை எனக்கூறி மத்திய அரசு தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இணைய சேவையும் முடங்கியுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மெய்டீஸ் மற்றும் மலைகளில் குடியேறிய குக்கி பழங்குடியினருக்கு இடையே, மெய்டீஸ் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் தொடர்ந்து இனக்கலவரம் நடந்து வருகிறது. மே 3 ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.

மணிப்பூரில் செயல்பட்டு வந்த மைதேயி மக்கள் விடுதலை, புரட்சிகர மக்கள் முன்னணி உள்ளிட்ட 9 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது, நாட்டின் இறையாண்மையை பின்பற்றவில்லை என கூறி மத்திய அரசு தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தடை உத்தரவால் மாநிலத்தில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vignesh

Next Post

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!… பழைய பென்சன் திட்டத்தில் வாய்ப்பு!… நவ.30 வரை காத்திருங்கள்!

Tue Nov 14 , 2023
பல்வேறு மாநிலங்களில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி மத்திய, மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பழைய பென்சன் திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் ஒரு சில மாநில அரசுகள் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. காங்கிரஸ் ஆளும் பல மாநிலங்களில் பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் […]

You May Like