fbpx

மின்சார வாகன ஓட்டிகளே…! தமிழகத்தில் 281 சார்ஜிங் நிலையம்…! மத்திய அரசு தகவல்…!

மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மாறுதல் மற்றும் உற்பத்தி என்ற FAME திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. FAME-திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 68 நகரங்களில் 2,877 மின் வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள 16 நெடுஞ்சாலைகள் மற்றும் 9 விரைவுச்சாலைகளில் 1576 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 281 சார்ஜிங் நிலையங்களும், புதுவையில் 10 சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்படும். அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவுக்கு 317 சார்ஜிங் நிலையங்களுக்கும், ஆந்திரப்பிரதேசத்தில் 266 சார்ஜிங் நிலையங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, FAME-திட்டத்தின் முதற்கட்டமாக 520 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Vignesh

Next Post

தீயாய் பரவும் செய்தி..!! இனி ரூ.500 நோட்டு செல்லாது..!! மக்கள் பயங்கர ஷாக்..!! இது உண்மைதானா..?

Wed Dec 14 , 2022
ரூ.500 நோட்டு தொடர்பான செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இணையதளங்களில் ரூ.500 நோட்டுகள் போலியானவை என்று ஒரு வைரல் செய்தி பரவி வருகிறது. ரிசர்வ் வங்கியின் கையொப்பத்திற்கு பதிலாக காந்தியின் பச்சைக்கோடு போடப்பட்ட நோட்டுகள் போலியானவை எனக் கூறப்பட்டு வருகிறது. தற்போது அரசு அமைப்பான PIB இந்த செய்தி குறித்து அளித்த தகவலில் இந்த இரண்டு வகையான […]

You May Like