fbpx

லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கிய மத்திய அரசு…!

லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்களை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. அதன்படி, ஜான்ஸ்கர், டிராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் ஆகியவை இப்போது அதிக கவனம் செலுத்தப்பட்டு, சேவைகளையும் வாய்ப்புகளையும் மக்களுக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டுவரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில்; லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சன்ஸ்கர், டிராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் பெயரில் புதிய மாவட்டங்கள் உருவாக உள்ளன. ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஆட்சியை வலுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கான நன்மைகளை அவர்களின் வீட்டு வாசலுக்கே இவை கொண்டு செல்லும். லடாக் மக்களின் வளர்ச்சிக்காக ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

பிரதமர் மோடி கூறியதாவது; ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதையொட்டி லடாக் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜான்ஸ்கர், டிராஸ், ஷாம், நுப்ரா, சாங்தாங் ஆகிய புதிய மாவட்டங்கள் இப்போது அதிக கவனம் செலுத்தப்பட்டு, சேவைகளையும் வாய்ப்புகளையும் மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

English Summary

Central Govt created 5 new districts in Ladakh

Vignesh

Next Post

தடை எதிரொலி!. மெடிக்கலில் வாங்கும் மருந்து உண்மையானதா?. போலியானதா?. எவ்வாறு கண்டுபிடிப்பது?

Tue Aug 27 , 2024
This is how you can find out whether the medicine bought from a medical store is real or fake

You May Like