fbpx

மத்திய அரசின் சூப்பரான திட்டம்… வங்கிக் கணக்கில் ரூ.3000/- விண்ணப்பிப்பது எப்படி.?

மத்திய அரசு ஏழை எளிய விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு விதமான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒரு திட்டம் பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு மாதம்தோறும் 3000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மேலும் விவசாயி இறந்த பிறகு அவரது மனைவிக்கு 1500 ரூபாய் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் இந்தியாவில் இருக்கும் அனைத்து விவசாயிகளும் இணைந்து பயன்பெற முடியும். இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். மேலும் ஆதார் கார்டு செல்போன் நம்பர் வருமான வரிச் சான்றிதழ் புகைப்படச் சான்று பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் பேங்க் பாஸ்புக் ஆகியவையும் வைத்திருக்க வேண்டும். இந்தத் திட்டத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் மேற்கூறப்பட்ட அனைத்து ஆவணங்களுடன் பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று தங்களது செல்போன் நம்பரை சமர்ப்பிக்க வேண்டும். அந்த நம்பருக்கு வரும் ஓடிபி பாஸ்வேர்டை உள்ளீடு செய்து தங்கள் பெயரை பதிவு செய்வதற்கான பணியை தொடங்கலாம் .

இந்தப் பக்கத்தில் பெயர் மற்றும் சுய விவரங்களை உள்ளீடு செய்த பின் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை நிரப்பி புகைப்படம் மற்றும் ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் . இதனைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு தகுதி உடைய நபர்களுக்கு பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதிய தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Next Post

’தம்பதிகளே’..!! ’அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்’..!! நாட்டு மக்களுக்கு அதிபர் வலியுறுத்தல்..!!

Sat Feb 17 , 2024
நேட்டோ படைகளின் விரிவாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையில் அந்நாடு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, 2 ஆண்டுகளாக நடைபெறும் உக்ரைன் போரில் 3 லட்சம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன், 1999-களில் இருந்தே ரஷ்யாவின் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. அந்த நாட்டின் மக்கள் தொகை 2021ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 14.34 கோடியாக உள்ளது. மக்கள் தொகை தொடர்ந்து […]

You May Like