fbpx

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய மத்திய அரசு உத்தரவு…!

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை 30.11.2023-க்குள் பதிவேற்றம் செய்ய மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு NMMS தகுதித் தேர்வு நடத்தப்படும்.

இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படும். இத்தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தகுதியானவர்கள். மேலும் இந்தத் தேர்வில் பங்கேற்க, மாணவரின் பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.1.5 லட்சம் இருப்பதுடன், 7-ம் வகுப்பின் முழு ஆண்டு தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இந்த நிலையில் 2022-23ஆம் கல்வியாண்டு NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை 30.11.2023-க்குள் பதிவேற்றம் செய்ய மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Vignesh

Next Post

இதை மட்டும் செய்து பாருங்கள், பழைய பூஜை பாத்திரங்கள் கூட புதுசு போல் மின்னும்..

Mon Oct 2 , 2023
நல்ல நாள் வருகிறது என்றால் அதில் இருக்கும் சந்தோஷத்தை விட, பூஜை பாத்திரங்களை துலக்கி எடுக்கும் வேலையை நினைத்தால் தலை சுற்றி விடும். ஆம், எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவதால் உடனே அதில் எண்ணெய் பிசுக்கு படிந்து. விளக்குகள் கருப்படைந்து விடும். எவ்வளவு துலக்கினாலும் பித்தாளை பாத்திரங்களை பளிச்சென்று மாற்றுவது கடினம். அப்படி உங்களுடன் பல வருடங்களாக எண்ணெய் பிசுக்கு படிந்த பூஜை பாத்திரங்கள் இருக்கா?? இனி கவலை வேண்டாம்.. […]

You May Like