fbpx

பான்-அதார் இணைப்பு: அபராதம் மட்டும் ரூ.601.97 கோடி..!! மத்திய நிதித்துறை முக்கிய அறிவிப்பு.!

அதார் அடையாள என்னுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ஜூன் 30-ம் தேதிக்கு பிறகு செயல்படாது என மத்திய நிதித்துறை அறிவித்திருக்கிறது. பான் கார்டுகள் அதார் அட்டைகளுடன் இணைப்பதற்கு ஜூன் 30-ம் தேதி காலக்கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தேதிக்குள் இணைக்கப்படாத பான் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் மத்திய நிதித்துறை தகவல் வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் ஜூலை மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் 31ம் தேதி வரை 11.68 கோடி பான் கார்டுகள் அதார் அட்டைகளுடன் இணைக்கப்படாமல் இருப்பதாக மத்திய நிதித்துறை பாராளுமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. மேலும் பான் கார்டை அதாருடன் இணைக்காத நபர்களிடமிருந்து அபராதமாக ரூ.601.97 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் அதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் வருமான வரி செலுத்துவதற்கு பயன்படுத்த முடியாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் வருமானவரிச் சலுகைகள் தொடர்பான பணப்பரிவர்த்தனைகளும் அதார் அட்டைகளுடன் இணைக்கப்படாத பான் கார்டுகளுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது. எனவே பான் கார்டை அதார் அட்டையுடன் இணைக்காதவர்கள் உடனடியாக 1,000 ரூபாய் அபராதம் செலுத்தி இணைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Next Post

ஊழல் மலிந்த திமுக!… 2024 ஓர் எச்சரிக்கை!… குடும்பத்திற்காக ஆட்சி நடத்துகிறது!… அண்ணாமலை குற்றச்சாட்டு!

Wed Feb 7 , 2024
வந்தவாசியில் நடைபெற்ற யாத்திரையின்போது பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் அரசியல் மாற்றம் வர வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். குடும்ப அரசியல், சாதி அரசியல், ஊழல் மற்றும் அடாவடியை மையப்படுத்தி 70 ஆண்டுகளாக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நான்கும் மக்களுக்கு பிடிக்கவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டுகளில் மூன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் […]

You May Like