காலிஸ்தான் ஆதரவு உணர்வுகளை ஊக்குவிப்பதாகக் கூறி ஆறு யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
காலிஸ்தான் ஆதரவு உணர்வுகளை ஊக்குவிப்பதாகக் கூறி ஆறு யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளர் அபூர்வ சந்திரா தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, கடந்த பத்து நாட்களில், ஆறு முதல் எட்டு வெளிநாட்டு யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். பஞ்சாபி மொழி சேனல்கள் எல்லை மாநிலத்தில் அமைதியின்மையை தூண்ட முயற்சிப்பதாக அவர் கூறினார்.
தீவிர போதகரும் காலிஸ்தான் அனுதாபியுமான அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் தங்கள் உதவியாளர்களில் ஒருவரை விடுவிக்க முயன்றதைத் தொடர்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. 48 மணி நேரத்திற்குள் சேனல்களை முடக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கைகள் மீது யூடியூப் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.