fbpx

உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…! தமிழகத்தில் வரும் 27-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் வரும் 27-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஒடிசா மாநிலம் சில்கா ஏரி அருகில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுகுறைந்து, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

Chance of rain till 27th in Tamil Nadu..

Vignesh

Next Post

வாரம் இரண்டு முறை மட்டும் வீட்டில் இப்படி பண்ணி பாருங்க..!! பண மழை கொட்டும்..!!

Mon Jul 22 , 2024
A house full of Lakshmi Kataksha will have a lot of money. But many of you do not keep your house clean.

You May Like