fbpx

எந்த நேரமும் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு..! 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

தொடர் கனமழை காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 7129 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால், அணையிலிருந்து 7428 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் தற்போது 49.75 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.

எந்த நேரமும் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு..! 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

கே.ஆர்.பி அணையின் 3 பிரதான மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அணையின் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மூன்றாவது நாளாக அணைக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கே.ஆர்.பி அணையில் இருந்து ச் உள்ளதால் தென்பெண்ணை ஆறு செல்லக் கூடிய கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஒரே நாளில் ரூ.280 குறைந்த தங்கம் விலை.. குஷியில் பெண்கள்...

Mon Aug 29 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38,160-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

You May Like