கடந்த மாதம் 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, இந்தியாவின் சார்பாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
அதன் பிறகு இதுவரையில், மூன்று முறை அந்த விண்கலம் சந்திரனை சுற்றி வரும் உயரம் குறைக்கப்பட்டிருந்தது. இந்த மூன்று முறையும், அந்த விண்கலத்தின் உயரத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குறைந்திருந்தனர்.
அந்த வகையில், இன்று சந்திராயன்-3 விண்கலத்தின் உயரம் 4வது முறையாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் நிலவிற்கும், சந்திராயன்-3 விண்கலத்திற்கும் இடையிலான குறைந்தபட்ச தொலைவு 153 கிலோ மீட்டர் என்றும், அதிகபட்ச தொலைவு 163 கிலோமீட்டர் என்ற அளவிலும் குறைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சூழ்நிலையில்தான், இந்த விண்கலத்தில் இருந்து, விக்ரம் லேண்டரை பிரிக்கும் மிக முக்கியமான பணி, நாளை நடக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். சந்திரனின் தென்துருவத்தில் வரும் 23ஆம் தேதி மாலை இந்த விண்கலத்தை மென்மையான முறையில், தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டு இருக்கிறது.