fbpx

இன்று மாலை தரையிறங்கும் சந்திரயான்-3!… விஞ்ஞானிகளை பதைபதைக்க வைக்கும் கடைசி 15 நிமிடங்கள்!… என்ன ஆகும்?

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான்-3 இன்று மாலை தரையிறங்குகிறது. லேண்டர் தரையிறங்கும் இந்த நிகழ்வில் கடைசி 15 நிமிடங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனத்தை, இன்று மாலை 6:04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை காண்பதற்காக உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. நிலவை ஆய்வு செய்வதற்காக, 2008ல் சந்திரயான் விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு மையம் செலுத்தியது. இது நிலவை சுற்றி வந்து வெற்றிகரமாக செயல்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் – 2 விண்கலம், 2019ல் அனுப்பப்பட்டது. இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டாலும், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க வேண்டிய, லேண்டர் சாதனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, நிலவில் மோதியது.

இந்த அனுபவத்தின் அடிப்படையில், நிலவில் மெதுவாக தரையிறங்கும் வகையில், ஒவ்வொரு நொடிக்கும் திட்டமிட்டு, 650 கோடி ரூபாய் செலவில், சந்திரயான் – 3 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் – 3 விண்கலம், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து கடந்த மாதம் 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கடந்த முறை சந்திரயான் 2 திட்டத்தில் இந்த இடத்தில்தான் தோல்வியடைந்தது. அப்போது நடந்த தவறுகளை பகுப்பாய்வு செய்து, இந்த முறை அதிலிருந்து மேம்படுத்தப்பட்ட சந்திரயான் விண்கலத்தை அமைத்துள்ளார்கள். இந்த 15 நிமிடங்களில் சந்திரயான் எட்டு கட்டங்களாக தரையிறங்கும் செயல்முறையை மேற்கொள்கிறது. நிலவின் அருகே வரை சென்ற உந்து கலத்திலிருந்து கடந்த 17 ஆம் தேதி ரோவருடன் கூடிய லேண்டர் பிரிந்தது. லேண்டர் தற்போது நிலவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இன்று மாலை சுமார் 5.30 மணி முதல் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு தொடங்கும்.

லேண்டரின் கீழ் பொருத்தப்பட்டுள்ள ராக்கெட்களின் செயல்பாட்டினால் வேகம் ஆயிரத்து 200 கி.மீ. குறைக்கப்பட்டு, நிலவுக்கு அருகே 7 புள்ளி 4 கி.மீ. தூரத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்த நிகழ்வு சுமார் 10 நிமிடங்கள் நடைபெறும். இதையடுத்து, லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டு உயரம் 6 புள்ளி 8 கிலோ மீட்டராக குறைக்கப்படும். அப்போது கிடைமட்டமாக உள்ள லேண்டர், செங்குத்தாக திரும்பும்.

தொடர்ந்து 800 மீட்டர் தூரத்துக்கு லேண்டரின் தூரம் குறைக்கப்படும்போது, அதன் வேகம் முற்றிலும் நிறுத்தப்படும். பின்னர் 150 மீட்டர் தூரத்திற்கு இறங்கும் லேண்டர், சுமார் 22 விநாடிகள் அந்தரத்தில் தொங்கும். அப்போது கேமரா கண்காணிப்புகள் தீவிரமடையும். தொடர்ந்து 60 மீட்டர் உயரத்திற்கு வரும் லேண்டர், இறகு போல் மெல்ல தரையிறங்கும். லேசர் டாப்லர் வெலாசி மீட்டர் மூலம் தூரம் நிர்ணயிக்கப்படும்.

Kokila

Next Post

இரவில் விவசாய நிலத்தை காவல் காப்பதற்காக சென்ற நபர்….! காலையில் காத்திருந்த அதிர்ச்சி, கதறிய உறவினர்கள், என்ன நடந்தது தெரியுமா….?

Wed Aug 23 , 2023
அரியலூர் அருகே விவசாய நிலத்தை பாதுகாப்பதற்காக இரவு விவசாய நிலத்திற்கு அருகில் இருந்த கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி காலையில் மர்மமான முறையில், உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். ஆகவே, நாள்தோறும் இரவு நேரத்தில், தன்னுடைய விவசாய நிலத்திற்கு காவல் காப்பதற்காக செல்வதை இவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். […]

You May Like