நிலவின் தென்துருவத்தில் இதுவரையில், எந்த ஒரு நாடும் ஆய்வு செய்யவில்லை. அந்த ஆய்வை இந்தியா துணிந்து மேற்கொள்ள தயாராகிவிட்டது.
அதன்படி, கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி சந்திராயன்-3 விண்கலம் நிலவை நோக்கி புறப்பட்டது.
சந்திராயன் 3 ராக்கெட் சந்திரனுக்கு மிக அருகில் கொண்டு செல்லப்படுவதற்கான பணியில் தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே பலமுறை இந்த நிலவின் சுற்றுவட்ட பாதை மாற்றப்பட்டு இருப்பதாக, சொல்லப்படுகிறது. அந்த வகையில், இன்று காலை 8.30 மணி அளவில் இந்த சுற்றுவட்ட பாதை குறைக்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது
சற்றேற குறைய இன்னும் ஒரு வார காலத்திற்குள் சந்திராயன் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் மெல்ல தரையிறங்க இருக்கிறது. இதற்கான 4ம் கட்ட சுற்றுப்பாதை குறைப்பு இன்று நடைபெற இருக்கிறது.
எதிர்வரும், ஒரு வார காலம் மிகவும் முக்கியமான காலகட்டமாக இந்த சந்திராயன் 3 விண்கலத்திற்கு சொல்லப்படுகிறது. இதை மிகவும் துல்லியமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள். சந்திரனில் எதிர்வரும் 23ஆம் தேதி அதன் தென் துருவத்தில் சந்திராயன்-3 வெற்றிகரமாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது