fbpx

சந்திராயன்-3 விண்கலத்தின் இறுதி கட்ட வேக குறைப்பு வெற்றி…..! விரைவில் தயாராகிறது சந்திராயன்-4 திட்டம், இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி வெளியிட்ட குட் நியூஸ்….!

இந்தியாவின் சார்பாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

நிலவின் புவி வட்ட சுற்றுப்பாதையில் இருக்கின்ற சந்திராயன்-3 விண்கலத்தில் இருந்து, விக்ரம் லேண்டரை பிரிக்கும் மிக முக்கியமான பணியானது சென்ற 17ஆம் தேதி நடத்தப்பட்டது. விக்ரம் லேண்டர் விண்கலத்தில் இருந்து, வெற்றிகரமாக பிரிந்த பின்னர், சந்திரனின் முதல் படங்களை பகிர்ந்தது விக்ரம் லேண்டர். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, லேண்டர் இமேஜஸ் எல் ஐ கேமரா-1 மூலமாக எடுக்கப்பட்ட பிரமிக்க வைக்கும் விதத்திலான, புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இந்த படங்களின் தொகுப்பு சந்திரனில் இருக்கின்ற பல்வேறு பள்ளங்களை துல்லியமாக காட்டி இருக்கிறது. அவற்றில் ஒன்று, ஜியோர் டானோபுருனோ பள்ளம் சந்திரனில் இருக்கின்ற மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தான், இந்தியா திட்டமிட்டபடி, வரும் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டர் தன்னை தானே புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பும் என்று இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக, அவர் தெரிவித்ததாவது, சந்திராயன்-2 திட்டத்தில் பெற்ற அனுபவங்களை வைத்துக் கொண்டு, சந்திராயன்-3 திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சந்திராயன்-3 சந்திரனின் தென் துருவத்தில் வரும் 23ஆம் தேதி வெற்றிகரமாக தரையிறங்க இருக்கிறது. அப்போது பழுதோ, அல்லது வேறு ஏதாவது சிக்கலோ உண்டானால், அதனை முறியடிக்கும் மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே சந்திராயன்-3 திட்டமிட்டபடி சாதனையை படைக்கும் என்று கூறியுள்ளார்.

சந்திரனில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்து இருப்பதை அடுத்து, அங்கே வேறு ஏதாவது மூலப் பொருள்கள் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்வதற்காக, முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற இந்த பயணம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சந்திராயன், சந்திரனில், இறங்க உள்ள இடம் கரடு முரடாக இல்லாமல், தரை இறங்குவதற்கு ஏதுவாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக சந்திராயன்-4 திட்டமானது சந்திரனில், தரையிறங்கி, அங்கே கனிம பொருட்கள் இருந்தால், அதனை பூமிக்கு எடுத்து வரும் விதத்தில், தயார் செய்யப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. நிலவில் மனிதன் வாழ்வதற்கான சாத்திய கூறுகளும், வாய்ப்புகளும் இருக்கின்றன. நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்திருப்பதால், ஆக்சிஜன், ஹைட்ரஜன் உற்பத்திக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. அங்கே மனிதனை அனுப்புவதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. 1960 ஆம் வருடத்தில் நிலவில் முதலில் கால் பதிப்பது யார்? என உலக நாடுகளுக்கு இடையே போட்டி காணப்பட்டது. அந்த போட்டி தற்போது இல்லை. உலக நாடுகளின் அமைதிக்கான இடமாக சந்திரன் இடம்பெற வேண்டும். இந்தியாவின் சந்திராயன்-3, ரஷ்யாவின் லூனா-25 உள்ளிட்டவற்றிற்கு இடையே போட்டி இருக்கிறது என்று கருத முடியாது. இரண்டுமே ஒரே விதமான பயணத்தில் தான் இருக்கின்றன என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தான், சந்திராயன் 3 விண்கலத்தின் இறுதி வேகக் குறைப்பு செயல்பாடு வெற்றி அடைந்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. இது குறித்து இஸ்ரோ தன்னுடைய twitter பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது, இரண்டாவது மற்றும் இறுதி டீபூஸ்டிங் நடவடிக்கை எல்.எம் சுற்றுப்பாதையை 25 கிலோமீட்டரிலிருந்து, 134 கிலோமீட்டர்க்கு வெற்றிகரமாக குறைத்து இருக்கிறது. தொகுதி உள் சோதனைகளுக்கு உட்பட்டு நியமிக்கப்பட்ட தரையிறங்கும் தளத்தில், சூரிய உதயத்திற்காக காத்திருக்கும், இயங்கும், இயங்குதல் வரும் 23ஆம் தேதி அன்று சுமார் 17.45 மணி நேரத்தில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Next Post

பரபரப்பு...! பண மோசடி வழக்கில் சிக்கிய ஜார்க்கண்ட் மாநில முதல்வர்...! 24-ம் தேதி ஆஜராக ED சம்மன்...!

Sun Aug 20 , 2023
பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்க இயக்குனரகம் ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு பண மோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகம் ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 8 அன்று சம்மன் அனுப்பியது ஆனால் ஆஜராகவில்லை. ஆகஸ்ட் 14 ஆம் தேதி பதவி நீக்கம் செய்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் […]

You May Like