சந்திரயான் 3-ன் வெற்றி மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான படிக்கட்டு என திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார் .
வளர்ந்த பாரதம் 2047 என்பது தொடர்பாக, திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேல் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர் மனித குடியேற்றத்திற்கு தேவையான நீர் மற்றும் ராக்கெட் எரிபொருள் போன்ற நிலவு பயணத்தின் முக்கியத்துவத்தை அவர் விவரித்தார். மேலும், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய மற்ற மூன்று நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் தோல்வி விகிதம் மிகக் குறைவு.
இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், சந்திரயான்-3-ன் மென்மையான தரையிறக்கம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான அடுத்த பணிகளுக்கு ஒரு படிக்கட்டு. இளைஞர்கள் ஒரு தொழில் முனைவோராக இருக்க வேண்டும், அதாவது வேலை தேடுபவராக இருப்பதை விட வேலைகளை உருவாக்குபவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உலகின் வேறு எந்த நாட்டையும் விட இந்தியா சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கியதாக கூறினார். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும்.